சர்வதேச சதித்திட்டத்தினால் இந்த கைப்பாவை அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது! இந்திக்க அனுருத்த
சர்வதேச சதித்திட்டத்தினால் இந்த கைப்பாவை அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும், சமயத்திற்கும், கலாசாரத்திற்கும் பெரும் சேவையாற்றுவார்கள் என எதிர்பார்ப்பில் இந்த அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சேவை
இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டவை அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா நிறுவனமொன்றின் ஊடாக சில நாடுகளுக்கு நிதி வழங்கியுள்ளதாகவும் அவ்வாறு இலங்கைக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாநாயக்க தேரர்கள் மற்றும் கார்தினலுக்கு அரசாங்கம் உண்மையான தகவல்களை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தகவல்
கைப்பாவை அரசாங்கம் கைப்பாவை ஆட்சியாளர்கள் இன்று நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்ப ஆட்சி நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணம் பெற்றுக்கொண்டமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தகவல்களை வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தால் அல்லது பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டால் நாட்டின் மின்சாரம் தடைப்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணி ஆட்சியின் போது இவ்வாறான மின்சார விநியோகப் பிரச்சினை காணப்பட்டாலும் சிறந்த முகாமைத்துவத்துடன் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
