நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
சீரான வானிலை
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும். நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri