யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை
தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட, நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவர், பாதசாரிகளிற்கும் பாடசாலை மாணவர்களிற்கும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வளர்ப்பு நாயினை பராமரிக்காது வளர்த்து வந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
குறித்த நாய், பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாக பருத்தித்துறை நகரசபையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு, தொடர்பாக பரிசீலணை மேற்கொண்டு நாயின் உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வழக்கு நேற்றைய தினம்(30.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாயின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது, உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கைப்பட்டுள்ளார்.
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri