கரையோர தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்: பயணிகள் கவனத்திற்கு..
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு இடையில், இரண்டு தினங்கள் தொடருந்து சேவைகள் தாமதமாகக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (31.01.2026) மற்றும் நாளை (01.02.2026) தொடருந்து சேவைகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் சட்டத்தரணியிடம் வேலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
பயணிகளுக்கான அறிவிப்பு
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் தொடருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தொடருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தொடருந்து திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan