தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணம் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்
தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தான் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள வரிகளும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார சிக்கல்களும் இதற்கு காரணங்களாக உள்ளதாகவும் சுட்டிக்கபட்டியுள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் மாற்றங்கள்
மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்ட சில மாற்றங்கள் உட்பட பல காரணிகள் இதற்கு காரணங்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்த உயர்வு ஒரு குறுகிய கால நிலைமை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென சரிந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.