இந்தோனேஷியாவில் பொதுமக்கள் முன் 140 பிரம்படிகள் பெற்ற தம்பதி
இந்தோனேசியாவின் ஆச்சே (Aceh) மாகாணத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளம் ஜோடி ஒன்றுக்கு, பொதுமக்கள் முன்னிலையில் தலா 140 பிரம்படிகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு மற்றும் மது அருந்துதல் ஆகிய குற்றங்களுக்காக வழங்கப்பட்ட இந்தத் தண்டனையின் போது, 21 வயதுடைய பெண் வலியால் அழுது துடித்ததுடன், தண்டனையின் ஒருகட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
மூன்று பெண் அதிகாரிகள் மாறிமாறி பிரம்பால் அடித்த நிலையில், மயக்கமடைந்த அந்தப் பெண் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பிரம்படி தண்டனை
ஆச்சே மாகாணத்தில் வழக்கமாக வழங்கப்படும் தண்டனைகளில் இதுவே மிக அதிகப்படியான எண்ணிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, ஷரியா சட்டப் பிரிவின் பொலிஸார் ஒருவர் உள்ளிட்ட மேலும் நான்கு பேருக்கும் வெவ்வேறு குற்றங்களுக்காகப் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரே மாகாணமான ஆச்சேயில், இத்தகைய தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இருப்பினும், இது தங்களது கலாசாரம் மற்றும் மத விழுமியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று உள்ளூர் அதிகாரிகள் வாதிட்டுள்ளனர்.
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam