நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது : ஹாபிஸ் நஸீர் அஹமட் (Photos)

Country UnitedNations Muslimpeople Gnanasarathero
By Navoj Mar 22, 2022 11:48 AM GMT
Report

இந்த நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அறபா நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலய அங்குரார்ப்பண நிகழ்வு அறபா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியவர்கள் என்று றிஸாட் பதியுதீன் பேசி திரிகின்றார். 20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியது தவறு என்றால் 17, 18, 19ஆம் சீர்திருத்தத்திற்கு நீங்கள் அமைச்சராக இருக்கும் போது கை உயர்த்தினீர்கள் அது சரியா.

நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது : ஹாபிஸ் நஸீர் அஹமட் (Photos) | Country Muslimpeople Gnanasarathero Unitednations

இதே நாடாளுமன்ற உறுப்பினர்களை போக சொன்னதும் நீங்கள் தான். இப்போது ஒன்றும் தெரியாதது போன்று அரசியல் காய் நகர்த்தல்களை செய்கின்றனர். இப் போதை அரசியல் யதார்த்தினை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

வாழ்க்கையைப் பாதித்திருக்கின்ற ஒரு பயங்கரமான கால கட்டம். மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடுகின்ற நிலமை. நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கடந்த 70 வருட காலமாக இந்த நாடு ஒரு தவறான அரசியல் வழி நடத்தலில் சிக்குண்டதன் விளைவாகத்தான் இப்பொழுது இந்த நாடு இந்த நிலைமைக்கு வந்து பாதிக்கப்பட்டு நிற்கின்றது.

நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது : ஹாபிஸ் நஸீர் அஹமட் (Photos) | Country Muslimpeople Gnanasarathero Unitednations

நாட்டை விற்றால் தான் கடன் சுமை தீரும் என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எந்த அரசியல் தலைமைகள் இந்த நாட்டை ஆண்டபோதும் கடன் தொகை கூடியதே தவிர குறையவில்லை. அதனால் தான் பாரிய சிக்கலுக்குள் இந்த நாடு அகப்பட்டிருக்கின்றது.

அதேவேளை இந்த நாட்டிலே இடம் பெறுகின்ற அரசியல் விடயங்களை முஸ்லிம் சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருந்து விட முடியாது.

ஐ. நா மனித உரிமைகள் தொடங்கி இந்திய பிராந்திய அரசியல் என்று காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை முஸ்லிம் சமூகம் உற்றுக் கவனித்து இராஜதந்திர ரீதியில் பல விடயங்களை காய் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது : ஹாபிஸ் நஸீர் அஹமட் (Photos) | Country Muslimpeople Gnanasarathero Unitednations

கோறளைப்பற்று மத்திக்கு 240 சதுர கிலோ மீற்றர் காணி வழங்கப்படிருக்க வேண்டும். இந்த விடயங்கள் தெரிந்த எந்தவொரு அரசியல் தலைமையும் முன்னெடுக்க முடியாத, வக்கில்லாத அரசியலை நடத்திய வரலாற்றை முஸ்லிம் சமூகம் மறந்துவிட முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம், அநியாயம், அநீதி தமிழ் சமூகத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பதில் சொல்லியாக வேண்டும்.

மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட நயவஞ்சக தன்மையாக விடயங்கனை முழு உலகிற்கும் கொண்டு செல்ல தயாராக உள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் 26 வீதம் உள்ள எங்களுக்கு உரிய காணி வேண்டும்.

இவ்வாறான துரோகத் தனத்தினை முஸ்லிம் சமூகம் தெரியாதவர்களாக இருந்து விடக் கூடாது. நாங்கள் கண் மூடித்தனமாக இருப்பதால் எங்களுடைய அரசியல் தலைமைகளும் ஏமாற்றியது மாத்திரமல்ல. மற்றைய அரசியல் தலைமைகளும் எங்களை ஏமாற்றி நாங்கள் முழித்திருக்கும் போது எங்களுடைய காணிகளை பிடுங்கிய வரலாறுகளையும் ஒரு போதும் மறந்து விட முடியாது.

20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தவில்லையாயின் கோறளைப்பற்று மத்திக்கும், ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக பிள்ளையான் அல்லது வியாளேந்திரன் வந்திருப்பார்கள்.

நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது : ஹாபிஸ் நஸீர் அஹமட் (Photos) | Country Muslimpeople Gnanasarathero Unitednations

ஓட்டமாவடி பிரதேச சபைக்குரிய காணியை இன்னும் கள்ளத்தனமாக கிரான் பிரதேச செயலகம் வைத்துள்ளது. 20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியதால் எல்லாவற்றுக்கும் சரணடைந்து நிற்போம் என்று நினைக்க கூடாது.

இந்த நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது. இதனை பார்த்து கண்மூடித் தனமாக இருக்கும் அரசியல் தலமையல்ல. உடல்களை எரித்த போது எங்களது உள்ளம் வேதனைப்பட்ட வரலாறு உள்ளது. அழுத கண்ணீர் இருக்கின்றது.

நாங்கள் அதனை முடித்து வைக்க வேண்டிய தேவை ஒரு அரசியல் தலைமைக்கு இருந்தது அதைதான் செய்தோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US