அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுடன் நேரடியாக மோத தயார் - ரஷ்யா அதிரடி அறிவிப்பு
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து யோசனைக்கு நேட்டோ சம்மதித்தால், அமெரிக்க தலைமையிலான அமைப்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையே இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைதி காக்கும் படையினரை உக்ரைனுக்கு அனுப்புவது ரஷ்ய ஆயுதப் படைகளுக்கும் நேட்டோவுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு உக்ரேனிய நகரமான எல்வோவில் ஒரு அடித்தளம் அமைக்க போலந்து தயாராக இருக்கலாம், மோதல் முடிந்ததும் அங்கேயே தங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு இதுபோன்ற எண்ணங்கள் உள்ளன. எண்ணங்கள் மட்டுமல்ல, இது கடந்த காலத்தில் நடந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட தங்கள் சிறிய படைகளை அனுப்புவதற்கு எதிராக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பால்டிக் அரசை எச்சரித்தார்.
தற்போது நேட்டோ மாநாடு நடைபெறும் எனவும் அமைதி காக்கும் படைகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும், போலந்து நட்பு நாடுகள் ஏற்கனவே கூறியுள்ளன. ஆபத்தில் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இது ரஷ்ய மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையே நேரடி மோதலாக மாறும். எல்லோரும் அதைத் தடுக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.
எனினும் அதனை தடுப்பது மாத்திரமல்ல கொள்கையளவில் அது நடக்கக்கூடாது என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.