யாழில் தவறான முடிவால் உயிரிழந்த இளைஞருக்கு பரிசோதனையில் வெளியான தகவல்
யாழ்.பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தும்பளை மேற்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த சண்முகராஜா துஷ்யந்தன் (வயது - 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குறித்த இளைஞரின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri