படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்தவும்: டக்ளஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கிலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்(Douglas Devananda) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட (Jaffna) செயலகத்தில் இன்று (30.05.2024) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுண்ணக்கல் அனுமதிப்பத்திரம்
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எம்.எஸ் சாள்ஸ்(P.S.M.Charles) ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில்,
ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் தொடர்பாகவும், கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் இருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கு அமைவாக சுண்ணக்கல்லை எடுத்துச செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சரியானவர்களுக்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் வரையில், ஆனையிறவை தாண்டி சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்து தொடர்பாகவும் பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
[ONVLCUK
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this