யாழில் சீரற்ற காலநிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 1514 குடும்பங்களைச் சேர்ந்த 5160பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 241 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 215பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பாதிப்பு
மேலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 259பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2264பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 439பேரும் மழையிலான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
அத்தோடு, கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 144பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 260பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் யாழ்பபாண மாவட்டத்தில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 73.2 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி அச்சுவேலி பகுதியில் பதிவாகியது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |