அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் கடமையில் மொட்டு கட்சி : மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார், எனவே அடுத்த தேசிய தேர்தல் வரை நிலையான அரசாங்கத்தை உறுதிப்படுத்துவது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமையாகும் என்று கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரிக் கொள்கை தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு திசைகளில் பிரச்சாரம்
இந்தநிலையில் பொதுமக்கள், தாம் வாக்களிக்கும் அரசியல் கட்சியின் வரிக் கொள்கை மற்றும் கடந்த கால பொருளாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் நெருங்க நெருங்க, மக்களை பற்றி சிந்திக்காமல் பல்வேறு திசைகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சலசலக்கும் முயற்சிகளை மீண்டும் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
