வெளிநாடுகளுக்கு போலி விசா அச்சிட்ட இருவர் கைது
குருநாகலில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கான பிரதான போலி விசா அச்சிடும் மோசடி சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்று (20.12.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் 32 மற்றும் 22 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

எனினும் மோசடியின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட மோசடி
இரண்டு இளைஞர்களும் தங்களுடைய வீட்டில் உள்ள அறை ஒன்றில் போலி விசா அச்சிடும் நிறுவனத்தை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வந்துள்ளனர்.

சந்தேகநபர்களின் கூற்றுப்படி, எந்தவொரு நாட்டிற்கும் போலி விசாவை அச்சிடுவதற்காக அவர்கள் 75, 000 ரூபாய் முதல் 100, 000 ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan