இலங்கைக்கு பெருந்தொகை டொலர்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
இலங்கைக்கு இந்த மாதத்தில் 787 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் கட்ட கடனுதவியாக 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
டொலர் கடனுதவி
பல்வேறு திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இரண்டாவது தவணையாக வழங்கியுள்ளது.
இந்த கொடுப்பனவுகள், வரவு செலவுத் திட்ட ஆதரவை பலப்படுத்தும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.