மட்டக்களப்பில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் உரிய வடிகான் வசதிவாய்ப்புக்கள் இன்மையால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையால் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெகுவாக உயர்ந்துள்ள குளங்களில் நீர்மட்டம்
இதன்போது மட்டக்களப்பிலுள்ள வெல்லாவெளிக்குளம், கோவில்போரதிவுக்குளம்,பெரியபோரதீவுக்குளம், பழுகாமத்திலுள்ள குளங்கள், மகிழூர், குருமண்வெளி, குருக்கள்மடம், களுவாஞ்சிகுடி, கதாவளை, உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளன.
அத்துடன் பெரிய குளங்களில் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாயர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நவகிரிக்கு குளத்தின் நீர்மட்டம் 31அடி வரை உயர்ந்துள்ளமையினால் அக்குளத்தில் 2 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதேவேளை தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3 அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33அடி 3அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 11அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 1 அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 7அடி, வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம் 12அடி 10 அங்குலம், புணாணை அணைக்கட்டில் நீர்மட்டம 5அடி 5அங்குலமாகவும் உயர்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பானசப் பொறியியலாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும் இன்று(18) காலை 6 மணிவரையிலிருந்து முற்பகல் 11.30 மணி வரையில் 24.6 மில்லி மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அதிகாரி சு.ரமேஸ் குறிப்பிட்டுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






