வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்! அரச சேவை தொடர்பில் ஆளுநர் கவலை

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Nov 05, 2026 11:06 AM GMT
Report

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ள தற்போதைய சூழலில் குறைந்துள்ளமை கவலைக்குரியது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அலுவலர்களுக்குக் காலத்துக்குக் காலம் பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களின் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கே என்று குறிப்பிட்ட ஆளுநர், அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் ஏற்பாட்டில், பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கான சேவை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் சில முக்கிய திணைக்களங்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளன. இருப்பினும், ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்கு நேரடியாகக் கோவையைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, வழமைபோன்று தபாலில் அனுப்பிவிட்டு அதற்காகக் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய நடைமுறைகள் சேவைகளில் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்! அரச சேவை தொடர்பில் ஆளுநர் கவலை | Continuing Plight In The Public Service

அலுவலர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களுக்குரிய பதவி உயர்வுகள் உள்ளிட்ட நிர்வாக விடயங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். அவர்களது கோவைகளை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடாது.

மக்களுக்கு அதிகாரிகள் எவ்வாறு சேவையாற்றுகின்றார்களோ, அதேபோன்று அதிகாரிகளின் தேவைகளையும் நிர்வாகம் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அலுவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் நோக்கம், மாறிவரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்ப்படுத்துவதாகும். அந்தப் பயிற்சிகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவையும் திறன்களையும் தமது அன்றாடப் பணிகளில் பயன்படுத்தி, மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும்.

அரச அதிகாரிகள் விமர்சனங்களுக்கு அஞ்ச தேவையில்லை..

அரச சேவையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அலுவலர்களின் பொறுப்பாகும். தற்போதைய அரச அலுவலகங்களில் அலுவலர்களும் திணைக்களத் தலைவர்களும் புதிய சிந்தனைகளைச் செயற்படுத்துவதற்கும், புத்தாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கும் தயக்கம் காட்டுகின்றனர்.

வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்! அரச சேவை தொடர்பில் ஆளுநர் கவலை | Continuing Plight In The Public Service

வேலை செய்யாமல் இருப்பதால் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை மாற வேண்டும். ஒருவர் செயற்படும்போது, அதிலும் சரியான முறையில் பணியாற்றும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழலாம். அவற்றைக் கண்டு அஞ்சிச் செயற்படாமல் இருப்பதைவிட, உரிய பொறுப்புணர்வுடன் பணியாற்றுவது அவசியம்.

அவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்வது சில சந்தர்ப்பங்களில் ஒருவர் சரியான முறையில் செயற்படுவதற்கான அடையாளமாகவும் அமையலாம். 

வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்! அரச சேவை தொடர்பில் ஆளுநர் கவலை | Continuing Plight In The Public Service

யாழில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளுக்குள் விலை மதிப்பீட்டு அதிகாரிகள்!

யாழில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளுக்குள் விலை மதிப்பீட்டு அதிகாரிகள்!

ஜனாதிபதியின் சொத்து விபரங்களில் எழுந்துள்ள சர்ச்சை!

ஜனாதிபதியின் சொத்து விபரங்களில் எழுந்துள்ள சர்ச்சை!



மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US