யாழ். சாவகச்சேரி மக்கள் போராட்டத்தை குழப்ப சதி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தென்மராட்சி மக்களினால் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள்
குறித்த போராட்டத்தை குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.
யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் மீது சாவகச்சேரியின் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்தியர் அர்சுனா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அவரை அகற்றுவதன் மூலம் தனது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை தூண்டி விடுவதாக வைத்தியத்துறை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
