யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைச் சுங்கம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மைய காலமாக பயணிகள் பரிமாற்றம் அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உடல் பரிசோதனை
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.