விரைவில் அறிமுகமாகும் இலங்கை பொலிஸ் செயலி - பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி..!
அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு இலங்கை பிரஜையும், Sri Lanka Police App-ஜ பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யூ. உட்லர் தெரிவித்துள்ளார்.
SOS பொத்தான்
மேலும், அவசர காலங்களில் இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை 10 விநாடிகளுக்கு அழுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடம் குறித்த தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும், 119 என்ற அவசர எண் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. மாறாக, தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய செயலி மூலம், உங்களுடைய பிரச்சினைகளை விரைவாக பொலிஸாருக்கு தெரியப்படுத்த முடியும்.

அதே போன்று, ஒரு குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது சிக்கல் ஏற்பட்டால் கூட, இந்தச் செயலி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்றும் இது தொடர்பாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயலியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்
- இலங்கை பொலிஸ் செயலியை பொலிஸ் ஸ்டோர் மூலமாக அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
- தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும் இதில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்துவது சாத்தியமற்றது.
2025-ஆம் ஆண்டில் 119 என்ற அவசர எண்ணைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் யோசிதவுக்கு ஆதரவாக வந்த நபருக்கு நேர்ந்த கதி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை