கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொன்ற சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சந்தேகநபர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் ஒரு கடைக்கு முன்பாக ஆகஸ்ட் (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்குளியை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கொழும்பு 05, கிருலப்பனையை சேர்ந்த 33 வயதான முகமது அஸ்மின் மொஹிதீன் ஆவார்.
இவர் கஞ்சிபானி இம்ரானின் மாமா என்று பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபரை கைது செய்த நேரத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் போதைப்பொருட்களும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைபேசிகளும் வழக்கு ஆதாரங்களாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவிருந்தார்.
மேலும், கொட்டாஞ்சேனை பொலிஸ் மற்றும் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.