ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது.
நளின் அர்ஜுன என்பவருக்கு சொந்தமானதாக குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள் இன்று (10) முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இரண்டு வீடுகளும் முடக்கம்
கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளின் போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பின்வரும் சொத்துக்களை, அவை வேறு யாருக்கும் விற்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ அல்லது திருத்தப்படுவதையோ தடுப்பதற்காக முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், அவற்றை செயலிழக்கச் செய்யும் உத்தரவை நீட்டித்து அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்