மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் வைத்தியர்களுக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம்: சுகாஷ்
மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் - செயற்படும் வைத்தியர்களுக்கு என்றும் எங்களது ஆதரவு உண்டு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடவுளுக்கு நிகரானவர்கள்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"வைத்தியர்கள் கடவுளுக்கு அடுத்தவர்கள் இல்லை, கடவுளுக்கு நிகரானவர்கள். அதனால்தான் சிவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்தது.
இயேசுவும் நோயாளிகள் பலரைக் குணப்படுத்தியதாக வேதாகமங்கள் பகிர்கின்றன.
யுத்த காலத்திலும் கொரோனா யுகத்திலும் ஈழத்தின் வைத்தியர்கள் ஆற்றிய புனிதமான பணிக்கு என்றென்றைக்கும் ஈழத் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.
வேறெந்தத் தொழில் செய்பவர் தவறிழைத்தாலும் பரிகாரங்களுண்டு. சட்டத்தரணி தவறிழைத்தால் மேன்முறையீடு செய்யலாம், ஆசிரியர் தவறிழைத்தால் அடுத்த தடவையாவது மாணவன் சித்தியடையலாம்.
ஆனால் மருத்துவர் தவறிழைத்தால் மேலுலகத்திற்கே செல்ல நேரிடும். ஒரு உயிர் ஒரு வாழ்க்கை.
உங்களைத் தொடர்ந்தும் கடவுள்களாகப் பார்க்கவே விரும்புகின்றோம். தயவுசெய்து புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் - செயற்படும் வைத்தியர்களுக்கு என்றும் எங்கள் ஆதரவும் சிரந்தாழ்த்திய நன்றிகள்."என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
