ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
மன்னாரில் நடைபாதை நாள் சந்தை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தான் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என அறிமுகப்படுத்தி குறித்த நபர் அடாடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையினால் ஆண்டு தோறும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமையான செயற்பாடாகும்.
குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடு
அந்த வகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.
இதன் போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை வியாபாரிகள் அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக வெளியேறியிருந்தனர்.
இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து இன்றைய தினம்(16.12.2024) பொலிஸார் மற்றும் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் அதிகாரிகளுடன் விதண்டா வாதத்தில் ஈடுபட்டதுடன் அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.
தடுக்கும் செயற்பாடு
மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் தாம் கதைத்த விடையங்களை ஒளிப்பதிவு செய்வதை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் காணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் தொலை பேசியையும் தட்டி விட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அதே நேரம் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும் தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் கடிதம் மாலை வரும் எனவும் தெரிவித்திருந்தார் .
இருந்த போதிலும் ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எந்த ஒரு கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் பேசவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
