கச்சத்தீவு தொடர்பில் இந்திய நாடாளுமன்றில் காங்கிரஸ் மீது வார்த்தை தாக்குதல்
கச்சத்தீவை இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டு, வழங்கியமை தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் மீது பாரதீய ஜனதாக்கட்சி கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், சியாச்சினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சூர்யா குற்றம் சுமத்தியுள்ளார்.
சியாச்சன், இந்த நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உறுதிப்பாடு என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு அரசியல்
மேலும், இந்தியாவிற்குச் சொந்தமான மிக முக்கியமான கச்சத்தீவு, அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸால் பரிசாக இலங்கைக்கு வழங்கப்பட்டது, எனவே காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பிரதேசங்களை ஏனைய நாடுகளுக்கு வழங்குவது சாதாரண விடயமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கச்சத்தீவு தீவை வழங்கும் போது நாடாளுமன்றுக்கு அது தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும், அதனை ஆதரித்ததாக சூர்யா குற்றம் சுமத்தினார்.
மேலும், ஜவகர்லால் நேருவும், இந்த சிறிய தீவுக்கு தாம் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்ததாக சூர்யா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |