அயோத்தி ராமர் கோயிலுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள அங்கீகாரம்
இந்தியாவின் (India) உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைந்துள்ள ‘ராம் மந்திர்’ ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரசித்தி பெற்ற ‘ஸ்வார்ட் ஒஃப் ஹொனர்’ (Sword of Honour) விருது வழங்கப்பட்டிருப்பதை அதன் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரிப்பேந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.
சிறப்புத் தேர்ச்சி பெறும் திட்டங்கள்
குறித்த விருதானது பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சில் செயல்முறை மற்றும் நடைமுறைகளை தணிக்கை செய்து, இறுதியாக செயல்பாடு மதிப்பீட்டை மேற்கொண்ட பின் வழங்கப்படுகிறது.
இதற்கு பிரிட்டனின் பாதுகாப்பு மன்றம் அதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அதன்படி ஐந்து நட்சத்திரங்கள் பெற்று சிறப்புத் தேர்ச்சி பெறும் திட்டங்களுக்குதான் இந்த விருது வழங்கப்படும் என்று ராமர் கோயில் கட்டுமானக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
