ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீண்டும் நாடாளுமன்றில் குழப்பம்
நாடாளுமன்றத்தில் முஜுபுர் ரஹுமான் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வி கேட்கும் போது சபாநாயகர் அவரின் ஒலிவாங்கியை நிறுத்தியதால் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியின் கேள்வி நேரத்தில் அவர் சபாநாயகருக்கு நிலையியல் கட்ளைச் சட்டம் தொடர்பில் விளக்கம் அளித்து ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் பிரதமரிடம் கேட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதிலின் போதே குழப்பம் ஏற்பட்டது.
எதிர்கட்சியின் கூச்சலுக்கு...
எப்போதும் நாங்கள் கேள்வி கேட்கும் போதே நேரம் வீணக்கடிக்கப்படுவதான சபாநாயகரின் கூற்று பிழையானது என்று முஜுபுர் ரஹுமான் கூச்சலிட்டார்.
மேலும், அச்சந்தர்ப்பத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எதிர்கட்சியின் கூச்சலுக்கும் சண்டித்தனத்துக்கும் பயப்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




