யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் : பொலிஸார் விசாரணை
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களிடேயே இடம்பெற்ற துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் மோதலொன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இதில் தலையிட்ட கோப்பாய் பொலிஸார் நிலைமையை சுமூகமாக்கிய போதும் ஞாயிற்றுக்கிழமை (19) திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மாணவர்கள் தங்களிடையில் மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
விடுமுறை நேரத்தில் இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காத போதும் பொலிஸாரின் அனுமதி பெற்று பெரும்பான்மையின மாணவர்கள் நிகழ்வை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்! - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி