சமஷ்டியை வலியுறுத்தக் கூட்டமைப்பினர் தீர்மானம்...!
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில்
அவரது வீட்டில் நேற்று (23.11.2022) கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் சுமுகமாகவும் இணக்கமாகவும் நடைபெற்றது எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீர்வு முயற்சிகள்
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களோடு இன்று (24.11.2022) சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் பங்குபற்ற அழைக்கப்படுவார்கள் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்வு முயற்சிகளுக்கான பேச்சு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள களச் சூழல் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வுப் பேச்சு முயற்சியில் ஆரம்பத்தில் வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர்
தாயகத்துக்கு சமஷ்டி தீர்வு என்ற அதிகாரப் பகிர்வு விடயத்தை ஒன்றுபட்டு நின்று
வலியுறுத்துவது எனவும், பின்னர் நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கூடிக்
கதைத்துப் பரிசீலித்து தீர்மானங்களை எடுப்பது என்றும் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது என கூட்டத்தில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri