வரவு செலவு திட்டத்தை எதிர்க்கப்போவதுமில்லை வாக்களிக்கப்போவதுமில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை
எதிர்க்கவுமில்லை, வாக்களிக்கப்போவதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தீர்மானித்துள்ளது.
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22.11.2022) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் இன்று (22.11.2022) காலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை
வரவு - செலவுத் திட்டத்தில் வாக்களிக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்ற பல விடயங்கள் உள்ளன.
எனினும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தச் சமயத்தில் நாங்கள் எதிர்த்து வாக்களிப்பது சில வேளைகளில் அந்த முயற்சியைக் குழப்புவதாக அர்த்தப்படலாம்.
வாக்கெடுப்பு
எம்மை நோக்கி அப்படியான குற்றச்சாட்டும் வரக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்க்கவுமில்லை, வாக்களிக்கப்போவதுமில்லை என்று முடிவெடுத்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இன்று மாலை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளாமல் இருக்கத்
தீர்மானித்துள்ளோம் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
