அம்பாறையில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈட்டு வழங்கி வைப்பு
அம்பாறை (Ampara) - சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கடந்த வருட பிற்பகுதில் யானை மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு சுமார் 6 மில்லியன் நட்டஈட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, நேற்று (23.07.2024) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
நட்டஈட்டு காசோலைகள்
தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு நட்டஈட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும், இந்நிகவில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எல் அஸ்லம் (LLB), முன்னாள் அரசாங்க அதிபர்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம சேவகர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |