பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள இலங்கையின் பெருமளவு கறுப்பு பணம்
இலங்கையில் இருந்து பணம் வெளியேற்றி, பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் வர்த்தக நடவடிக்கையில் பலர் ஈடுபடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என நேற்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அனுமதி
கடந்த அரசாங்கத்தின் போது இது குறித்து விசாரணை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போது, அவ்வாறான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.




