பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல : ஹர்ஷன சாடல்
பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(08.09.2026) நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில் குறிப்பிடுகின்றார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல, மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய வேண்டும்.
இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில் இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார்.
ஆகவே, இந்தச் சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக ஏற்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்