இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்

United Nations Sri Lankan Peoples Sri Lanka Final War
By Rakesh Sep 09, 2026 05:33 AM GMT
Report

இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றன என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் நேற்று(08.09.2026) வாசிக்கப்பட்டது.

பொறுப்புக்கூறலில் தாமதம்

அவர் மேலும் உரையாற்றுகையில், ஆயுதமோதல் காலத்து மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம் | No Progress Violations Armed Conflict Sri Lanka

ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகச் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.

எனினும், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதால் நியாயமான வழக்கு விசாரணை மற்றும் முறையான நீதிமன்ற மேற்பார்வை உள்ளிட்ட நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துத் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல்போனோர் அலுவலகம்

அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம் | No Progress Violations Armed Conflict Sri Lanka

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்வதால், அந்த அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மலையக சமூகத்துக்கு நிதி ஒதுக்கீடு

2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 வீதமானவை கடன் மீள்செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரியது.

இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம் | No Progress Violations Armed Conflict Sri Lanka

குறிப்பாக மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அவசியமாகும்.

நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கூற்றுக்கு வரவேற்கத்தக்கது.

இலங்கையில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்

ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US