சர்ச்சையை ஏற்படுத்திய கொழும்பு மாணவன் விவகாரம்.. மூத்த சிஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் சிரேஸ்ட மாணவ தலைவர் ஒருவரின் மோசமான நடவடிக்கை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன் அம்மாணவனிடம் இருந்து தொடர்புடைய காணொளிகளை இணையத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக மூத்த சிஐடி அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
குறித்த மாணவன், அப்பாடசாலையில் உள்ள 4 பெண் ஆசிரியர்களுடன் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டதாகவும் காணொளி அழைப்பு மூலம் அவர்களுடன் உரையாடி அவற்றை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அண்மையில் பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மாணவ தலைவர்..
இந்நிலையில், அந்த மாணவன், பாடசாலையின் தலைமை மாணவ தலைவராக இருந்த நிலையில் தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

4 பெண் ஆசிரியர்களையும் அந்த மாணவன் தவறாக வழிநடத்தி இரகசியமாக அவற்றைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்னர் வேறொரு தரப்பினரால் இணையத்தில் கசியவிடப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், பாடசாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
இருப்பினும், இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாகவும், தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை தொடர்ந்து பாடசாலையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
காணொளியை நீக்க முறைப்பாடு..
இதற்கிடையில், தொடர்புடைய மாணவர் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவில் இந்த காணொளி விவகாரம் குறித்து முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்போது, சம்பந்தப்பட்ட காணொளிகள் பிற தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தனது தனியுரிமையைப் பாதுகாக்க அவற்றை நீக்க வேண்டும் என்றும் அந்த மாணவர் கோரியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், முதலில் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்று அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு அந்த நிறுவனம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில், இணையத்திலிருந்து தொடர்புடைய காணொளிகளை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிப்பது உண்மை என்று அங்குள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து அந்த மாணவர் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.