ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மீண்டும் மண்சரிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் இன்று(24.9.2026) மாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டிருந்த அதே பகுதியில் மீண்டும் மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளன.
இதனால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதியூடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் எச்சரிக்கை
மண்சரிவினால் வீதியில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அதுவரை சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் , ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam