கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

Colombo Jaffna Sri Lankan Peoples Srilanka Bus
By Kajinthan Dec 22, 2024 08:00 PM GMT
Report

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அந்த பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் மதவாச்சி அல்லது வவுனியா பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர்.

ஹட்டன் பேருந்து விபத்து தொடர்பில் சாரதிக்கு விளக்கமறியல்

ஹட்டன் பேருந்து விபத்து தொடர்பில் சாரதிக்கு விளக்கமறியல்

பாதி பயணம் 

இவ்வாறு இறக்கி விடும்போது "பின்னால் வேறு பேருந்து வருகின்றது. நீங்கள் அந்தப் பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கலாம். அந்த பேருந்துக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை" என கூறப்படுகிறது.

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு | Colombo Jaffna Bus Issue People Complain

கொழும்பில் இருந்து பயணச் சீட்டுகள் யாழ்ப்பாணத்திற்கு என பதிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில் கொழும்பில் இருந்து வவுனியா அல்லது மதவாச்சி பகுதிக்கான கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு மிகுதி பணம் மீளவும் பயணிகளிடம் வழங்கப்படுகின்றது. பயணிகள் அடுத்த பேருந்து வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அத்துடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதை கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் என்றே காணப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான மூன்றாவது தாக்குதலை திட்டமிட்டுள்ள ஈரான்

இஸ்ரேலுக்கு எதிரான மூன்றாவது தாக்குதலை திட்டமிட்டுள்ள ஈரான்

உரிய நடவடிக்கை 

ஆனால், இவ்வாறு இடையில் இறக்கி விடுகின்ற பேருந்துகளின் பயணப்பாதையானது கொழும்பு, குருணாகல் தம்புள்ளை ஊடாக மதவாச்சி அல்லது வவுனியா வரை செல்கிறது.

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு | Colombo Jaffna Bus Issue People Complain

இந்த பயணப்பாதையானது மிக நீண்ட தூரமாகும். இன்றையதினம் (22) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக பயணிகள் சிலர் தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் கொழும்பு - வவுனியா என சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததுடன் 1763 ரூபா கட்டணம் அறவிடப்படப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேருந்தில் கொழும்பு - யாழ்ப்பாணம் என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது என்று பேருந்தின் நடத்துனர் கூறியதுடன், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து வேறு ஒரு அரச பேருந்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு | Colombo Jaffna Bus Issue People Complain

இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கொழும்பில் இருந்து வவுனியா வரை 7 மணித்தியாலங்களும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இரண்டரை மணித்தியாலங்களும் என மொத்தமாக 9 1/2 மணித்தியாலங்கள் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் உண்மையான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் 7 அல்லது 7 1/2 மணத்தியாலங்களே பயணத்திற்கு செலவிட வேண்டிய தேவை உள்ளது.

மேற்படி மோசடியில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தேவையற்று நேரத்தை செலவழிக்க வேண்டி ஏற்படுவதுடன் சில பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தமது பணத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என்ற கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த நிலையிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது போல தெரியவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்

உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US