உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்
கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை தலையில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக நோயாளர் ஒருவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கொண்டிருந்த குறித்த நோயாளிக்கு உடனடி சிகிச்சை வழங்க சுகாதார தரப்பினர் தவறியுள்ளனர்.
அசமந்த போக்கு
பின்னர், குறித்த நோயாளியை 4ஆம் விடுதியில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனாலும், விடுதிக்கு நோயாளியை அழைத்து செல்லத் தெரியாமல் அழைத்துச் சென்ற நோயாளியின் உதவியாளர் தடுமாறிக் கொண்டு இருந்துள்ளார்.
இந்தநிலையில், அங்கு நின்ற மக்கள் சுகாதார ஊழியர்களின் உதவியை பெறுமாறு கூறிய நிலையில், 4ஆம் விடுதிக்கு பெண் உதவியாளர்கள் அழைத்து செல்ல முடியாது எனக் கூறுகின்றார்.
ஒரு நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது, அந்த நோயாளியை உரிய இடங்களிற்கு அழைத்து செல்வதற்கு உதவியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விடுதிகளில் பல்வேறு நோய்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி வெளியார் வெளியாட்களை உள்ளே அனுமதிப்பது குறைவாகும் என்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், அந்த சம்பவம் வைத்தியசாலை ஊழியர்களின் செயற்பாடு தொடர்பில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
