கொழும்பில் உள்ள உணவகமொன்றில் துரித உணவில் காணப்பட்ட கரப்பான் பூச்சி
கொழும்பு - இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞர்கள் குழு ஒன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் நடைபெற்ற இசை போட்டியில் பங்குபற்றி இடைவேளையின் போது குறித்த உணவகத்தில் உணவருந்த வருகை தந்த நிலையிலேயே இந்த அருவருப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.
உணவக உரிமையாளரின் அசமந்த போக்கு
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த உணவை உட்கொண்டமையால் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதுபற்றி விசாரிக்க சென்ற இளைஞர்கள் அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, குறித்த உணவக உரிமையாளர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் உணவக ஊழியர்களும் அசமந்த போக்கில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
