இலங்கையின் மூன்று நிதி நிறுவனங்களுக்கு பெருந்தொகை அபராதம்
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்திற்கு இணங்காத மூன்று நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அதன்படி, அபராதத் தொகையாக மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 14 மில்லியன் ரூபா அறவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அபராதத்தொகை அரசாங்க ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதிப் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பணமோசடி
குறித்த அபராதத்தொகை 2023 செப்டெம்பர் 27 மற்றும் 2023 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் விதிக்கப்பட்டதாக நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.
மேலும், நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கையில் பணமோசடியைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்குமான ஒழுங்குமுறை நிறுவனமாகச் செயற்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam