துபாயிலிருந்து வந்த படுக்கை விரிப்புக்குள் 50 கோடி பெறுமதியான சிகரெட்டுகள்: சுங்கப் பிரிவினரின் அதிரடி
துபாயிலிருந்து படுக்கை விரிப்புகள் போர்வையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 33 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்றைச் சுங்கப் பிரிவினர் அண்மையில் விசேட சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, இவ்வளவு பெரிய அளவிலான சிகரெட் தொகை பிடிப்பட்டுள்ளது. இறக்குமதி ஆவணங்களில் குறித்த கொள்கலனில் "படுக்கை விரிப்புகள்" இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
46 கோடி ரூபா வரி வருமானம்
சுங்க வரி மற்றும் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான திட்டமிட்ட ஏமாற்று வேலையில் கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி சுமார் 50 கோடி 70 இலட்சம் ரூபா எனச் சுங்கப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத இறக்குமதி காரணமாக அரசுக்குச் சேர வேண்டிய சுமார் 46 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த கொள்கலனானது பத்தரமுல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முகவரிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்கப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளதுடன், கடத்தலுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri