ஹோர்முஸ் நீரிணையை மூட அதிகாரம் இல்லை! ஈரானை எச்சரித்த பஹ்ரைன்
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் நீரிணைகுறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் தனது கடுமையான நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது உரையாற்றிய பஹ்ரைன் வெளி விவகார அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி,
"சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த நீர்வழியை மூடுவதற்கு ஈரான் குடியரசிற்கு எந்த உரிமையும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இதன் பாதுகாப்பை உறுதிசெய்வது ஒரு சர்வதேசப் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சமூகத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) உறுப்பு நாடுகள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக விளங்குவதைக் குறிப்பிட்ட அவர்,
இந்த நீர்வழிப்பாதையை ஈரான் முடக்குவது உலகெங்கிலும் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பறிக்கும் செயல் என்று சாடினார். ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள "தீவிரமான மாற்றங்கள்" உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், இந்தத் தீர்மானம் மிகவும் அவசியமானது என்று அவர் வாதிட்டார்.
ஈரானின் இத்தகைய ஆதிக்கப் போக்குகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உரக்கக் கூறிய அல் ஜயானி, சர்வதேச சமூகம் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காலக்கெடுவிற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு உடனடியாக நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம்! தடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல்
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam