யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்!
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றையதினம் (02.11.2025) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம்
பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்புக்காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam