நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி (Photos)
இன்றைய தினம் உலக வாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் நத்தார் பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஹட்டன் திருச்சிலுவை ஆலயம்
நுவரெலியா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் நத்தார் தின வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஆலய பங்கு தந்தை
நிவ்மன் பீரிஸ் தலைமையில் மிகவும் எளிமையான முறையில் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நத்தார் தின தேவ ஆராதனை இடம்பெற்றதுடன் திருப்பலியும்
ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆராதனையை தொடர்ந்து மக்கள் ஒருவருக்கொருவர் நத்தார் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் கெரோல் கீதங்களும் இசைக்கப்பட்டுள்ளன.
செய்தி : கன்னிகன் சுந்தரலிங்கம்
புத்தளம் சாந்த மரியா ஆலயம்
நத்தார் பண்டிகையை கொண்டாடும் விதமாக புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில் இன்று (25.12.2023) நள்ளிரவு 12 மணியளவில் நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டதுடன் அருட்சகோதரிகள் ஆயர்கள், மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
செய்தி : அசார் தீன்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்
இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் அதன் பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக மீட்பின் இரட்சகர் இயேசு பாலகனின் பிறப்பினை கொண்டாடும் நத்தார் ஆராதனை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் திங்கட்கிழமை (25.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த ஆராதனையில் பெருந்திரளான இறைவிசுவாசிகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து
கலந்துகொண்டதுடன், இறை பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், தேவாலய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி : ருசாத்
மலையகத்தில் விசேட ஆராதனைகள்
நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் ஆகியோருக்கு இயேசு கிறிஸ்து மகனாக பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில், மலையகத்தில் 25.12.2023 அன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் இயேசு பிறப்பையொட்டி விசேட ஆராதனைகள் மற்றும் கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட்தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : க.கிஷாந்தன்
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகள் மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளனன.
மட்டக்களப்பு
மாவட்டத்தின், இயேசு கிறிஸ்து பிறப்பின் பிரதான வழிபாடு, மட்டக்களப்பு
புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னை யோசப் தலைமையில் ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட ஆலய பங்கத்தந்தைகளினால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இயேசு கிறிஸ்துவினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு தொட்டியில் பாலனின் உரு ஆயரினால் வைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பு நினைவு கூரப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, விசேட இயேசு கிறிஸ்து பிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நள்ளிரவு ஆராதனைகள் வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி : ருசாத்
யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயம்
யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் விசேட திருப்பலியில் யாழ்ப்பாண மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,வடமாகாண
ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
செய்தி : பு.கஜிந்தன்
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம்
இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் நத்தார் பிறப்பின் நள்ளிரவு திருப்பலி நேற்று (24.12.2023) இரவு மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில், பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்துள்ளனர்.
ஆயரின் உரை
இதன்போது, இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டதை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து, நத்தார் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர், அருட்தந்தையர்கள், இணைந்து ஒப்புக்கொடுத்துள்ளனர்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி
நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள
வேண்டும் என இந்த நத்தார் தினத்தில் விசேடமாக நாங்கள் வாழ்த்துவதாக ஆயர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் பாதுகாப்பு
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டுள்ளது.
நத்தார் ஆராதனையை முன்னிட்டு
தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நள்ளிரவு திருப்பலி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
