ரகசியத்தை மறைக்கும் மகிந்த : ஏப்ரலில் அம்பலமாகும் உண்மை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வேட்பாளர் அறிவிப்பு ஏப்ரல் மாத இறுதியிலேயே வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட 4 அரசியல்வாதிகளின் வேட்புமனுக்கள் தொடர்பில் தமது கட்சி பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு கூடி உரிய வேட்பாளரை தெரிவு செய்யும். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
