சீனா அனுப்பிய உளவு பலூன்:இராணுவ தகவல்களை சேகரித்ததா..! அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன பலூன் பல முக்கிய ராணுவ தளங்களில் இருந்து உளவுத்துறையை சேகரித்து உடனடியாக பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாக அமெரிக்கா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மற்றும் ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சீனாவால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள்
இந்த பலூன் முதலில் ஜனவரி 28 அன்று அலாஸ்காவிலிருந்து அமெரிக்க வான்வெளிக்குள் நுழைந்தது என்றும், அடுத்த நான்கு நாட்களில், அமெரிக்காவின் சில அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள மொன்டானாவில் உள்ள மால்ஸ்டாராம் விமானப்படை தளத்தின் மீது பறந்தது என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.
மூன்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், பலூனை சீனாவால் கட்டுப்படுத்த முடிந்தது என்றும், அதனால் சேகரிக்கப்பட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் பெய்ஜிங்கிற்கு அனுப்ப முடியும் எனவும் கூறுப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம்
இதேவேளை சீனாவால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் பெரும்பாலும் மின்னணு சமிக்ஞைகளிலிருந்து பெறப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூனில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிகள் எடுக்கவில்லை என்றால், சீனா மிகவும் முக்கியமான பகுதிகளில் இருந்து பல உளவுத் தகவல்களை சேகரித்திருக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூன் சம்பவம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்கனவே இருந்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
