உலகப்போரை நினைவுபடுத்திய பைடன்:சீன உளவு பலூன் குறித்து வெளிவரும் பின்னணி
அமெரிக்காவிலுள்ள உள்ள முக்கிய இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்றை வீழ்த்துவது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்க உறவில் விரிசல்
குறித்த உளவு பலூன் விவகாரத்தால் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆறு கடல் மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த பலூனை அமெரிக்க ராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
புதன்கிழமையே, சுட்டு வீழ்த்தும் உத்தரவை ஜனாதிபதி பைடன் அளித்ததாகவும், ஆனால் அந்த பலூன் கடல் மீது நகர்ந்து நிலை கொள்ளும் வரையில் ராணுவ நிர்வாகம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த பலூனை வெற்றிகரமாக அகற்றி விட்டோம் எனவும், அதைச் செய்த விமானிகளைப் பாராட்ட விரும்புகிறேன் எனவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக போர்
1942 ஜூலை மாதம் தான் கடைசியாக அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என கூறப்படுகிறது.
ஜப்பானின் Mitsubishi A6M Zero போர் விமானம் ஒன்றை அலாஸ்கா பகுதியில் வைத்து அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதுடன் இதில் 19 வயது விமானி ஒருவரும் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவத்திற்கும் ஓராண்டுக்கு முன்னர் Pearl Harbor தாக்குதலை முன்னெடுத்த ஜப்பானின் போர் விமானங்களில் 6 எண்ணிக்கையை அமெரிக்க விமானிகள் ஜார்ஜ் வெல்ச்(23), மற்றும் கென்னத் டெய்லர்(22) ஆகியோர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
இந்த வீரச்செயலை ஆதரித்து இருவருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் வெல்ச் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக கூறி அவருக்கு பதக்கமானது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
