யாழில் கைதானவர்களுக்கு பலாலியில் நேர்ந்த கதி - பகீர் தகவல்
தையிட்டியில் - திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி, ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தகைதுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்துள்ளதாக வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“எங்களை பலாத்தகாரமான முறையில் பொலிஸ்நிலையம் அழைத்து சென்றார்கள். அழைத்து செல்லவில்லை இழுத்துச்சென்றார்கள்.
எங்களுடைய தொலைபேசிகள் , ஆவணங்கள்,உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சப்பாத்து முதல் உடலில் இருந்த Belt வரை கழற்றப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டோம்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளிளை காண்க..
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri