இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறதா சீனா..!
இலங்கைக்கு கப்பலை அனுப்பும் சீனாவின் நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் வொஸ்ப் ஒப் அமெரிக்கா இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சீனாவின் இலக்கு
இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வர்த்தக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பயன்படுத்துவதே சீனாவின் இலக்கு என்ற முன்னாள் இலங்கை இராஜதந்திரி தயான் ஜயதிலகவின் கருத்தை வொய்ஸ் ஒப் அமெரிக்கா பதிவிட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பல் - தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு |
அத்துடன் இலங்கையின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சீனாவின் கப்பலுக்கு வழங்கிய ஒப்புதலை, புதிய அரசாங்கம் திரும்பப் பெறவும், நிறுத்தவும் வாய்ப்பில்லை என்று இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
கால அட்டவணையை மாற்றியமைக்க இலங்கை விருப்பம்
சீனாவிடம் இருந்து எதிர்பார்க்கும் 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற வேண்டுமானால், சீனாவின் கடன்களை செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்கவும் இலங்கை விருப்பமுடன் இருக்கிறது.
எனவே கப்பல் அனுமதியை ரத்து செய்வதன் மூலம் சீனாவின் அதிருப்தியை இலங்கை விரும்பவில்லை என்றும் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சீனா தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்து
சீன திட்டங்கள் மற்றும் கடன்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையற்றவை மற்றும் அதிக வட்டி வீதத்தைக் கொண்டவை என்று அமெரிக்க அரசாங்கம் கூறுவது சரியானது என்று ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.
சீன கப்பல் குறித்து இந்தியாவுக்கு உறுதியளிக்க அவசர முயற்சி |
சீனாவின் நோக்கம் இலங்கைத் துறைமுகத்தை அதன் இராணுவக் கப்பல்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்வதே ஆகும். இதற்காக இராணுவத் தளத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் துணை உயர் ஸ்தானிகர் கே.பி.ஃபேபியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகவும் கவலையளிக்கும் ஒரு விஷயம். சீனா இந்தியாவிற்கு இராணுவ சவால்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று ஃபேபியன் கூறியுள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
