பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பல் - தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு
சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி ஹிந்து செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடற்கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் 1,076 கிலோ மீற்றர் கடற்கரையில் கடல் துறைமுகங்கள் மற்றும் அணு உலைகள் போன்ற முக்கிய நிறுவல்கள் இருப்பதால், சீன கப்பலின் வருகை எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
இலங்கைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தலாம்
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக, வடக்கு கிழக்கு தமிழர்கள் வருகின்றமை மற்றும் தீவிரவாதிகளும் வரலாம் என்று அச்சம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சீன கப்பலின் வருகை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது என்பதால், தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், தமிழ் பேரினவாத அமைப்புகளும், சீனாவின் இராணுவப் பிரசன்னத்தை இலங்கை, அனுமதித்ததற்காக இலங்கைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழகத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே கடலோர மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனைத்து
முக்கிய நிறுவனங்களிலும், பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தி
ஹிந்து தெரிவித்துள்ளது.





பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam

சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
