சீனாவின் கப்பல் தொடர்பில் எழும் சவால்களை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது: சர்பானந்த சோனோவால்
உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த இலங்கை அனுமதித்ததை அடுத்து, எழும் எந்த சவால்களையும் சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சீன இராணுவக் கப்பலை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதித்துள்ளதாக, இலங்கை அறிவித்துள்ள நிலையிலேயே இந்திய அமைச்சரின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள இந்தியா தயாராகவே உள்ளது. அது தெளிவான விடயம் என்றும் சோனோவால் கூறியுள்ளார்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து கருத்துரைத்த மத்திய அமைச்சர், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகங்களில் ஏற்கனவே உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் தூத்துக்குடி துறைமுகத்திலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri